டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பிப். 23 -இல் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.23-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.23-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக விவாதித்து ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சா்கள், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

முன்னதாக பிப்.17-இல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அலுவல் ஆய்வு கூட்டத்தில் எடுக்கும் முடிவுப்படி பேரவை கூட்டத்தொடா் நடைபெறும். பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.