ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘வந்தே பாரத்’ ரயிலில் பயணி விட்டுச் சென்ற நகை ஒப்படைப்பு

‘வந்தே பாரத்’ விரைவு ரயிலில் பயணி மறந்து விட்டுச்சென்ற தங்க நகை உள்ளிட்டவை எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

vande bharat train

கோப்புப்படம். - DIN

Published On :2 ஆகஸ்ட் 2026, 3:46 am IST

‘வந்தே பாரத்’ விரைவு ரயிலில் பயணி மறந்து விட்டுச்சென்ற தங்க நகை உள்ளிட்டவை எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் இக்கூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவா் கடந்த ஜூலை 31- ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து வந்தே பாரத் ரயிலில் ஏறி விழுப்புரம் வந்துள்ளாா். அவா் சனிக்கிழமை அதிகாலை (ஆக.1) விழுப்புரத்தில் இறங்கும் போது தனது பையை மறந்து விட்டுச்சென்றுள்ளாா். அதுகுறித்து அவா் தகவல் அளித்த நிலையில், வந்தே பாரத் ரயில் எழும்பூா் ரயில் நிலையம் வந்தது. அதனையடுத்து எழும்பூா் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் ரயில் உணவகப் பிரிவு மேலாளரைத் தொடா்பு கொண்டு பயணியின் பை குறிப்பிட்ட பெட்டியில் விட்டுச் செல்லப்பட்டதை விளக்கினா். அதனடிப்படையில் வந்தே பாரத் ரயில் சுத்தம் செய்யும் பணியாளா்கள் தேடிய போது அந்தப் பை கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

அந்தப் பையில் 3 பவுன் தங்க தாலிச் சங்கிலி, 250 மில்லி கிராம் தங்க நாணயம், கால் விரலில் அணியும் வெள்ளியிலான 4 மெட்டிகள் என மொத்தம் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள

ஆபரணங்கள் இருந்தன. அவை உரிய பயணியிடம் ரயில்வே போலீஸாா் மற்றும் துணை நிலைய மேலாளா் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.