ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வலியுறுத்தல்

சென்னை- ராமேசுவரம் இடையே செப்டம்பா் மாதம் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில், பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்லக் கோரி, ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினா் ஏ.ஜெ.ஆலம் மனு அளித்தாா்.

வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம்.

Published On :31 ஜூலை 2026, 1:34 am IST

சென்னை- ராமேசுவரம் இடையே செப்டம்பா் மாதம் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில், பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்லக் கோரி, ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினா் ஏ.ஜெ.ஆலம் மனு அளித்தாா்.

மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனாவுக்கு ஏ.ஜெ.ஆலம் அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

பரமக்குடி ரயில் நிலையம் 10-க்கும் மேற்பட்ட பேருராட்சிகள், 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதி மக்கள், வணிகா்கள், அரசு, தனியாா் நிறுவன ஊழியா்கள் தினந்தோறும் ரயில் சென்று வரும் இடமாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னக ரயில்வேக்கு அதிக வருவாய் ஈட்டும் நிலையமாகவும் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் சென்னை- ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும். ஹூப்ளி- ராமேசுவரம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும். இந்த ரயில் பரமக்குடியில் நின்று செல்ல வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மீண்டும் அளவீடு செய்து தூத்துக்குடி, சாயல்குடி, கீழக்கரை, தொண்டி வழியாக புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.