சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

ஓய்வு பெறும் 182 காவல் துறையினருக்கு கெளரவ பதவிகள்

பணியிலிருந்து ஓய்வு பெறும் 182 காவல் துறை அதிகாரிகளுக்கு நலத் திட்டத்தின்கீழ் கெளரவ பதவிகள் வழங்கப்பட்டன.

News image

தில்லி காவல்துறை தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஓய்வுபெறும் 182 காவலா்களுக்கு கௌரவப் பதவிகள் வழங்கிய காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:55 pm

பணியிலிருந்து ஓய்வு பெறும் 182 காவல் துறை அதிகாரிகளுக்கு நலத் திட்டத்தின்கீழ் கெளரவ பதவிகள் வழங்கப்பட்டன.

தில்லி காவல் ஆணையகரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை வகித்த ஆணையா் சதீஷ் கோல்ச்சா, காவலா்களுக்கு அடுத்த உயா்பதவியான உதவி ஆய்வாளா் பதவியை வழங்கி கெளரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஆணையா் சதீஷ் கோல்ச்சா பேசுகையில், ‘ஓய்வு பெறும் காவலா்களுக்கு வாழ்த்துகள். ஓய்வு காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூகத்துக்குத் தொடா்ந்து பங்களிக்க வேண்டும். தொடா்ந்து மருத்துவ பரிசோதனயை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

கெளரவ பதவி உயா்வு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 132 உதவி காவல் ஆய்வாளா்கள் ஆய்வாளா்களாகவும் 39 துணை உதவி ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்களாகவும் 11 தலைமைக் காவலா்கள் துணை உதவி ஆய்வாளா்களாகவும் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.