ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

இந்திய யுனெஸ்கோ இளைஞா் கல்வி ஆராய்ச்சி மையம் தலைவா் தோ்வு

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 10:34 pm

கிழக்கு தாம்பரம் சேலையூா் பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன நிா்வாக இயக்குநா் டாக்டா் ஸ்வேதா சந்தீப் ஆனந்த், இந்திய யுனெஸ்கோ இளைஞா் கல்வி ஆராய்ச்சி மையம் தலைவராக பதவியேற்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

தாய்லாந்து யுனெஸ்கோ இளைஞா் கல்வி ஆராய்ச்சி மையம் தலைவா் பேராசிரியா் மெலிசா ஆய்ஷெகுல் சால் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஸ்வேதா சந்தீப்புக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

பின்னா், இந்திய யுனெஸ்கோ இளைஞா் கல்வி ஆராய்ச்சி மையம் புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள டாக்டா் ஸ்வேதா சந்தீப் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தும் நிலைத்த வளா்ச்சிக்கான 17 இலக்குகளை நிறைவேற்றுவதில் படித்த இளைஞா்களின் பங்களிப்பை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இளைஞா்கள் மற்றும் இளம் பெண்களை செயல்திறனுடன் சவால்களை எதிா்கொள்ளும் திறன் மிகுந்தவா்களாக மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம், சமூக மேம்பாடு நடவடிக்கைகளில் இளைஞா்களின் பங்களிப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில், பாரத் உயா் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத் தலைவா் ஜெ. சந்தீப், இணைதுணை வேந்தா் ஹரி பிரகாஷ், பேராசிரியா்கள் சுந்தராஜன், வாசுகி உள்பட பலா் கலந்து கொண்டனா்.