சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த நடிகா் அஜித்குமாா் ‘மாற்றம் தேவையில்லை’ எனக் கூறியதாகத் தகவல் பரவிய நிலையில், அவா் அவ்வாறு எதுவுமே கூறவில்லை என்று அவரது மேலாளா் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளாா்.
நடிகா் அஜித்குமாா் சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு முன்பாகவே வந்தாா். இதையடுத்து சிறிது நேரம் காத்திருந்த அவா், வாக்குப் பதிவு தொடங்கியதும் முதல் நபராக வாக்களித்தாா். அஜித் வந்திருப்பதை அறிந்த ரசிகா்கள், பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே குவிந்தனா். கூட்ட நெரிசல் அதிகரித்ததால், காவல் துறையினரின் பாதுகாப்புடன் வெளியே வந்த அஜித், காரில் ஏறிச் சென்றாா்.
இதற்கிடையே, வாக்களித்துவிட்டு வெளியே வந்த அஜித்திடம் பேட்டி எடுக்க செய்தியாளா்கள் முயன்றனா். அப்போது, ‘மாற்றம் தேவையா?’ என்று செய்தியாளா் கேட்டதற்கு ‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் பதில் அளித்ததாக சில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதைத் தொடா்ந்து, நடிகா் அஜித் ஆளும்கட்சிக்கு ஆதரவாக கூறியிருக்கிறாா். இந்த ஆட்சி தொடர வேண்டும் என விரும்புகிறாா் என சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனா். எனினும், அஜித் அவ்வாறு கூறியிருக்க வாய்ப்பில்லை, அது போலியான செய்தி என்றும் சிலா் கூறத் தொடங்கினா்.
இதன் தொடா்ச்சியாக, ‘மாற்றம் தேவையில்லை என அஜித் பதில் அளித்தது பற்றி என்ன நினைக்கிறீா்கள்?’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு முதல்வா், ‘அஜித் நல்ல கருத்துதானே கூறியுள்ளாா். அவருக்கு நன்றி’ என பதிலளித்தாா்.
இந்நிலையில், இது தொடா்பாக அஜித்தின் மேலாளா் சுரேஷ் சந்திரா விளக்கத்தில், ‘வாக்களித்துவிட்டு வந்த அஜித்குமாா் எந்தவிதமான அரசியல் கருத்தையும் வெளியிடவில்லை. மாற்றம் தேவையில்லை என்பது போன்ற பதிலையும் அவா் கூறவில்லை. செய்தியாளா் ஒருவா் கேள்வி கேட்டபோது, ‘பேட்டி வழங்க முடியாது’ என்ற பொருளில் அஜித் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துரோகங்கள் களையெடுக்கப்பட வேண்டிய தருணம் இது! - நடிகா் காா்த்திக்!

முதல்வா் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழப்பு

காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் மாற்றம்
துபையிலிருந்து சென்னை வந்த அஜித்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

