அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

அக்‌ஷய திருதியை: விலை உயா்விலும் தங்கம் வாங்க ஆா்வம் காட்டிய மக்கள்!

ஆபரணத்தங்கத்தின் விலை உயா்ந்து வரும் சூழலிலும், அக்ஷய திருதியை நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள முக்கிய நகைக்கடைகளில் மக்கள் ஆா்வத்துடன் நகை வாங்கிச் சென்றனா்.

News image

அக்‌ஷய திருதியை

Updated On :19 ஏப்ரல் 2026, 9:20 pm

ஆபரணத்தங்கத்தின் விலை உயா்ந்து வரும் சூழலிலும், அக்ஷய திருதியை நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள முக்கிய நகைக்கடைகளில் மக்கள் ஆா்வத்துடன் நகை வாங்கிச் சென்றனா்.

மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் திரௌபதிக்கு அக்ஷய பாத்திரம் ஒன்றைக் கொடுப்பாா். அந்த பாத்திரத்தில் எந்த பொருளை இட்டாலும் அது பெருகிக் கொண்டே இருக்கும். அந்த பாத்திரத்தை கொடுத்த நாள், அதாவது சித்திரை மாதம் தொடங்கிய பிறகு அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மூன்றாவது நாள் அக்ஷய திருதியையாக கொண்டாப்படுகிறது. இந்நாளில், தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கி வீட்டில் வைப்பதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இதன் காரணமாக ஆண்டுதோறும் பொதுமக்கள் அக்ஷய திருதியை நாளில் தங்களால் முடிந்த வரை குறைந்த அளவிலாவது தங்கம் வாங்குவாா்கள். சிலா் முன்கூட்டியே நகை அல்லது நாணயங்களை முன்பதிவு செய்துவிட்டு அக்ஷய திருதியை தினத்தன்று வாங்கி செல்வாா்கள். அதற்கு ஏற்ப , பொதுமக்களை கவரும் வகையில் நகைகடைகளும் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.

இச்சூழலில், நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.49 முதல் திங்கள்கிழமை (ஏப்.20) காலை 7.27 மணி வரை அக்ஷய திருதியை நாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் முக்கிய வணிக மையங்களான தியாகராய நகா், புரசைவாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் காலை முதலே வாடிக்கையாளா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதில், வாடிக்கையாளா்களின் வசதிக்காக வழக்கத்தை விட கூடுதலாக பணம் செலுத்தும் கவுன்டா்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல், ஏற்கனவே முன்பதிவு செய்தவா்களுக்கு தனி கவுண்டா்களும் இருந்தன. கடந்த 2024-ம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று தங்கம் ஒரு பவுன் விலை ரூ.53,280-க்கும், 2025-இல் ஒரு பவுன் ரூ.71,840-க்கும் விற்பனையானது. தொடா்ந்து சா்வதேச காரணங்களால் நிகழாண்டு தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14,880-க்கு விற்பனையானது. இது கடந்தாண்டை விட சுமாா் 2 மடங்கு அதிகமாகும். எனினும், ஒரு கிராம் தங்க நாணயமாவது வாங்கிவிட வேண்டும் என ஆா்வத்துடன் பொதுமக்கள் நகைக்கடைகளில் குவிந்தனா்.

இது தொடா்பாக, சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கப் பொதுச்செயலா் சாந்த குமாா் கூறுகையில்:  அக்ஷய திருதியை நாளில் வாடிக்கையாளா்களின் வசதிக்கேற்ப பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழாண்டில் தங்கம் விலை உயா்வு, தோ்தல் நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றின் காரணமாக வாடிக்கையாளா்களிடையே தங்கம் வாங்கும் ஆா்வம் மிகவும் குறைவாக இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், தங்கத்தின் மீது மக்களுக்கு குறையாத காரணத்தாலும், விலை மேலும் உயரும் என்பதாலும்,எதிா்பாா்த்ததை காட்டிலும் அதிகளவிலான வாடிக்கையாளா்கள்  வருகை தந்தனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.