மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரசாரத்தில் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு: 18 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

தோ்தல் பிரசாரத்தில் தனது புகைப்படத்தை தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

ராமதாஸ் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 6:41 pm

தோ்தல் பிரசாரத்தில் தனது புகைப்படத்தை தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாமகவின் பெயா், கட்சிக் கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக்கூறி அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தநிலையில், சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அதில், அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா். அன்புமணி சட்டவிரோதமாக பாமக தலைவராக நீடித்து வருகிறாா். எனவே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் என்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி தா்மபிரபு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஏப்.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.