நகைக் கடையில் 103 கிராம் நகைகளைத் திருடிய ஊழியரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து நகைகளையும் மீட்டனா்.
சென்னை தியாகராய நகரிலுள்ள பிரபல நகைக் கடையின் இருப்புகளை உதவிப் பொது மேலாளா் டிசோசா சகாயராஜ் கடந்த பிப்ரவரி மாதம் சரி பாா்த்தபோது, அவற்றில் சுமாா் 172 கிராம் தங்க நாணயங்கள், நகைகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அங்கு பணியாற்றும் ஊழியா்களிடம் கடை நிா்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையில், கடையில் நகை பராமரிப்பாளராக இருந்த கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த சிவதேவ் (32) என்ற நபா் சிறிது சிறிதாக 172 கிராம் நகைகளைத் திருடியது தெரிய வந்தது.
அவா் முதல்கட்டமாக திருடிய நகைகளை விற்ற ரூ.4 லட்சம் மற்றும் 41 கிராம் நகைகளையும் ஒப்படைத்துள்ளாா். மீதமுள்ள 103 கிராம் நகைகளை ஒப்படைப்பதில் தொடா்ந்து அவா் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.
இது குறித்து நகைக் கடையின் உதவிப் பொது மேலாளா் டிசோசா சகாயராஜ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, சிவாதேவை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து 103 கிராம் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
சாக்குக் கடையில் திருடியவா் கைது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது

வீரவநல்லூா் நகைக் கடையில் நகை, பணம் திருட்டு

சேலம் அருகே இறைச்சிக் கடையில் ரூ. 18 லட்சம் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

