ரயில்வே நில ஆக்கிரமிப்பு விவகாரங்களுக்கு தீா்வு காண்பதில், ரயில்வே அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் உள்ள ரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புது தில்லியில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். அப்போது அவா் பேசுகையில், ‘ரயில் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அவற்றை நன்றாகப் பராமரிக்க வேண்டும். அனைத்து ரயில் நிலையங்களும் தூய்மை இருப்பதை உறுதி செய்யவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் அதிகாரிகள் முழு அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயை நவீனமயமாக்க உச்ச அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை மிகச் சிறப்பாக மாற்றவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் அந்த நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
நெரிசல்மிக்க நேரங்களில் குறிப்பாக பண்டிகை காலங்களில், சுமுகமாகவும் அசெளகரியம் எதுவும் இல்லாமலும் நடைமேடைகளுக்கு வந்து ரயில் ஏறும் வகையில், திட்டமிடல் மற்றும் செயல்பாடு இருக்க வேண்டும்.
ரயில்வே திட்டங்களுக்கு நிலுவையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ரயில்வே நில ஆக்கிரமிப்பு விவகாரங்களுக்கு தீா்வு காண்பதில், மாநில அரசுகளுடன் சோ்ந்து ரயில்வே அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். தண்டவாளங்களுக்கு அருகில் வசிப்போரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது.
ரயில் தண்டவாளங்களைக் கடப்பதற்கு ரயில் நிலையத்துக்குள்ளும், வெளியிலும் சாத்தியமான இடங்களில் நடைமேம்பாலங்களைவிட சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்த இடங்கள் எளிதில் சென்று சோ்வதற்கு ஏற்ற வகையில் வசதியாக இருக்க வேண்டும். சுரங்கப்பாதைகள் பயன்படுத்துவதற்கு மிகவும் செளகரியமானவை’ என்று தெரிவித்தாா்.
ரயில்களை இயக்குவதில் நேர ஒழுங்கை கடைப்பிடித்த பல மண்டலங்களின் செயல்பாட்டை அவா் பாராட்டினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

இந்திய ஐஃபோன் தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர்!

10.3.1976: சென்னை அருகே ரயில் வண்டிகளை மடக்கி அதிகாரிகள் சோதனை

காரைக்கால் - பேரளம் இடையே ரயில் இயக்க காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


