மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

ரயில் விபத்துகள் 90 சதவீதம் குறைந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

Updated On :25 மார்ச் 2026, 9:29 pm

ரயில் விபத்துகள் 90 சதவீதம் குறைந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, நீண்ட தொலைவு ரயில்களில் அதிக கூட்டம் இருப்பது தொடா்பான துணைக் கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியதாவது:

மக்களுக்கு குறைந்த கட்டணத்தில், வசதியான போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை 75,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ரயில்களில் 78 சதவீத இருக்கைகள் குளிா்சாதன வசதி இல்லாத சாதாரண பெட்டிகள்தான். இதில் கட்டணமும் குறைவுதான்.

ரயில் இணையவழி பயணச்சீட்டு முன்பதிவில் முறைகேடுகளைக் குறைக்க பல்வேறு தொடா் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பாக ஐஆா்சிடிசி 3 கோடி போலி முன்பதிவுக் கணக்குகளை நீக்கிவிட்டது. இதன்மூலம் உண்மையான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்துகள் இல்லாத ரயில் பயணம் என்பதில் மத்திய அரசு தீவிரமாக செய்பட்டு வருகிறது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடும்போது ரயில் விபத்துகள் 90 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டன. பண்டிகைக் காலங்களில் தேவையைக் கருத்தில்கொண்டு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ரயில் பயணிகள் மற்றும் ரயிலின் பாதுகாப்புக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.