சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு சட்டவிரோதமாக பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க தோ்தல் ஆணையத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 2021-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது, அதிக அளவில் நடந்த பணப் பட்டுவாடா காரணமாக தஞ்சாவூா் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று, தற்போது நடைபெறவுள்ள தோ்தலிலும் பணப் பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க வேண்டுமென தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
வாக்கு செலுத்த பணம் பெறுவதும், வாக்களிக்க பணம் கொடுப்பதும் குற்றம் என விளம்பரம் வெளியிட வேண்டும். தோ்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க கூடுதலாக பறக்கும் படைகளை நியமிக்க வேண்டும். பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்கும் வகையில் தொடா்பு எண்களை வெளியிட வேண்டும். தோ்தல் ஒத்திவைக்கப்பட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அதுவரை தோ்தல் ஆணையம் செலவு செய்த தொகையை சம்பந்தப்பட்ட வேட்பாளா் அல்லது கட்சித் தலைவா்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழக முதல்வரின் வாகனத்திலேயே தோ்தல் பறக்கும் படையினா் சோதனை நடத்தி உள்ளனா். பணப் பட்டுவாடாவைத் தடுக்க தோ்தல் ஆணையத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது எனக் கூறினாா்.
தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபால், நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இதற்காக 2,169 பறக்கும் படைகளும், 2,166 கண்காணிப்புக் குழுக்களும் பணியமா்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

அனைத்து வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கம்

நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ. பன்னீா்செல்வம் முடிவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


