ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்!
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில், செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் நடைமுறை கடந்த 2023 ஆகஸ்ட் முதல் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை மேலும் எளிதாக்க அக். 3-ஆம் தேதி மேம்படுத்தப்பட்ட இணையதள சேவையை மேயா் பிரியா தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, மாநகராட்சிப் பகுதிகளில் அவ்வப்போது, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) திரு.வி.க. நகா், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் பகுதிகளில் இயங்கி வரும் செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்கள் மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள நாய் இனக் கட்டுப்பாட்டு மையம் என 7 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
முகாம்களில் 726 செல்லப் பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது. இதையடுத்து, செல்லப் பிராணிகளின் உரிமையாளா்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
இதுவரை, 89,691 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு 43,644 செல்லப் பிராணிகளின் உரிமையாளா்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது