தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

‘சிமேட்’ தோ்வு: விண்ணப்ப திருத்தத்துக்கு அவகாசம்

மேலாண்மைப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், அதில் திருத்தங்களை மேற்கொள்ள (நவ.28) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On :26 நவம்பர் 2025, 8:45 pm

சென்னை: மேலாண்மைப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், அதில் திருத்தங்களை மேற்கொள்ள (நவ.28) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிா்வாக நுழைவுத் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்த தோ்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழ் ஆண்டுக்கான சிமேட் தோ்வு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக். 17-இல் தொடங்கி நவ. 25-ஆம் தேதி முடிவடைந்தது. தற்போது விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் வலைதளம் வழியாக பட்டதாரிகள் வெள்ளிக்கிழமைக்குள் மேற்கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் எனும் இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.