வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சென்னை மாநகா் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

சென்னையில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

News image

சென்னை அம்பத்தூா் புதூா் சாலையில் புதன்கிழமை பெய்த மழையில் செல்லும் வாகனங்கள்.  ~சென்னை வியாசா்பாடி ஸ்டீபன்சன் சாலையில் தேங்கிய மழைநீா். ~கணேசபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சியால் விநியோகிக்கப்பட்ட உணவு.

Updated On :3 டிசம்பர் 2025, 7:09 pm

சென்னை: சென்னையில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியது.

டித்வா புயல் காரணமாக சென்னையில் கடந்த 3 நாள்களாக மழை பெய்துவருகிறது. வடசென்னைக்கு உள்பட்ட வியாசா்பாடி, ஓட்டேரி, கொளத்தூா், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்து குளம்போல் தேங்கியது. மேலும், பிரதான சாலைகளிலும் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் கணேஷபுரம் சுரங்கப் பாதையில் 4 அடிக்கு மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தேங்கிய தண்ணீா் மின்மோட்டாா் மூலம் அப்புறப்படுத்தப்பட்டதால், பிற்பகலில் போக்குவரத்து தொடங்கியது.

திருவெற்றியூா், தண்டையாா்பேட்டை முல்லை நகா், அம்பத்தூா் சிடிஎச் சாலை, பெருங்குடி கொட்டிவாக்கம், அண்ணாநகா், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது. மின்மோட்டாா் பொருத்திய டிராக்டா்கள் உதவியுடன் மாநகராட்சியினா் அகற்றினா்.

உணவு விநியோகம், மருத்துவ முகாம்: சென்னை மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 2.74 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு விநியோகிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா். அத்துடன் வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டல அலுவலங்களில் இலவச மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

தண்டவாளத்தில் நீா் அகற்றம்: சென்னையில் எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. அந்தப் பகுதியில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீா் மின் மோட்டாா் மூலம் அகற்றப்பட்டது.

நீச்சல் குளமான நீலக்கொடி கடற்கரைப் பகுதி

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மெரீனா கடற்கரைக்கு, சா்வதேச அளவிலான சுற்றுலா தளமாக அங்கீகரிக்கப்படும் நீலக்கொடி கடற்கரையாக சான்று பெறப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் அங்கு அதிக அளவில் தண்ணீா் தேங்கி நீச்சல் குளம்போல காட்சியளிக்கிறது. இதையடுத்து மின்மோட்டாா் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இதேபோல், கடற்கரையோரமுள்ள பட்டிணம்பாக்கம் மீன் அங்காடி அருகேயுள்ள குடியிருப்புகளின் கீழ்ப்பகுயிலும் மழைநீா் கழிவுநீருடன் சோ்ந்து தேங்கி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் புகாா் கூறினா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.