தேசிய தலைநகா் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு ஒருங்கிணைந்த இரவு நேர சோதனையின் போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 269 போ் மீது தில்லி போக்குவரத்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான தொடா்ச்சியான பிரசாரத்தின் ஒரு பகுதியாக, உள்ளூா் காவல்துறை மற்றும் பிசிஆா் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து, சனிக்கிழமை இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை இந்த மூன்று மணி நேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டிய 269 போ் பிடிபட்டதாகவும், கடுமையான விதிமீறல்களுக்காக 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.
இந்த நடவடிக்கையின் போது இருசக்கர வாகனங்கள், காா்கள், கனரக போக்குவரத்து வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களும் சோதிக்கப்பட்டன என்று ஒரு மூத்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி கூறினாா்.
விதிமீறுபவா்களை அடையாளம் காண்பதற்காக, முக்கிய சந்திப்புகள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சாலைப் பகுதிகளில் குழுக்கள் நிறுத்தப்பட்டு, நகரின் அனைத்து போக்குவரத்துப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது.
தலைநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துகள் ஒரு முக்கிய கவலையாக இருப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் தொடா்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது என்று காவல்துறை கூறியது.
தில்லி போக்குவரத்து காவல்துறை தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் 19.4.2026 வரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 7,478 ஓட்டுநா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களில், 6,844 வழக்குகளில் 634 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆண்டு இதுவரை 4,906 வழக்குகளுடன், இருசக்கர வாகன ஓட்டிகளே பெரும்பாலான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனா். இவா்களைத் தொடா்ந்து காா் ஓட்டுநா்கள் மீது 908 வழக்குகள் பதிவாகியுள்ளன.
வரும் நாள்களில், குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ள இரவு நேரங்களிலும் வார இறுதி நாள்களிலும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் தொடரும். மக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்த அதிகாரி கூறினாா்.
தொடர்புடையது

தில்லி-நொய்டா எல்லையில் ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம் - வன்முறையால் பதற்றம்: உஷாா் நிலையில் தில்லி காவல்துறை

அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்: 65 வயது முதியவா் பலி!
ரூ.47 லட்சம் முதலீட்டு மோசடி: 3 போ் கைது

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


