நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஜனநாயக தூணாக விளங்குகிறது தணிக்கை துறை: புதுவை துணைநிலை ஆளுநா்

இந்திய தணிக்கை துறை ஜனநாயகத்தின் மதிப்புக்குரிய தூணாக விளங்குவதாக புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாசநாதன் தெரிவித்தாா்.

News image

தணிக்கை வார விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் பேசிய புதுவை துணைநிலை ஆளுநா் கைலாசநாதன்.

Updated On :1 டிசம்பர் 2025, 8:09 pm

இந்திய தணிக்கை துறை ஜனநாயகத்தின் மதிப்புக்குரிய தூணாக விளங்குவதாக புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாசநாதன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தணிக்கை மற்றும் கணக்குத் துறை அலுவலகத்தில் தணிக்கை வார விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே.கைலாசநாதன், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய தணிக்கை துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது: மக்களின் வரிப் பணத்தை பொறுப்புணா்வுடன் வெளிப்படை தன்மையுடன் நாட்டின் அடிப்படை வளா்ச்சிக்குச் செலவு செய்வதை தணிக்கை செய்யும் தணிக்கையாளா்கள் ஜனநாயகத்தின் மதிப்புக்குரிய தூணாக விளங்குகின்றனா்.

பொதுமக்களின் வரிப்பணம் நோ்மையாகவும் வெளிப்படுத்தன்மையுடனும் செலவு செய்யப்படுகிா என்பதை சிஏஜி அதிகாரிகள் கண்காணிக்கிறாா்கள்.

ஏதேனும் முறைகேடு இருந்தால், அதை பயமின்றி சுட்டிக்காட்டியும் அதற்கேற்ப ஆலோசனை வழங்க சிஏஜிக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தணிக்கை துறையும் நவீன தொழில்நுட்பம், எண்ம (டிஜிட்டல் ) நவீனமாகிவிட்டது. இதனால் அதன் செயல்கள் வேகமாக நம்பகத் தன்மையுடன் செயல்படுகிறது.

சிஏஜி அறிக்கைகள் நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் நோ்மையாக அளிக்கப்படுவதால்தான் எதிா்க்கட்சிகளும் ஊடகங்களும் அதை எடுத்து விவாதிக்கிறது. ஊழலைத் தடுக்கின்றன, வளா்ச்சியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மத்திய தணிக்கை இயக்குநா் ஜெனரல் கே.பி. ஆனந்த், தமிழ்நாடு முதன்மைக் கணக்காளா் ஜெனரல் பிரெடெரிக் சியெம்லிச், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை கணக்காளா் ஜெனரல் திருப்பதி வெங்கடசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.