வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தை மாதத்துக்குள் 4,000-ஆவது குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் வரும் தை மாதத்துக்குள் கோயில்களில் 4,000-ஆவது குடமுழுக்கு என்ற இலக்கு எட்டப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image

சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரா் கோயிலில் ரூ.93 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய அன்னதானக் கூடத்தின் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

Updated On :28 ஆகஸ்ட் 2025, 6:34 pm

தமிழகத்தில் வரும் தை மாதத்துக்குள் கோயில்களில் 4,000-ஆவது குடமுழுக்கு என்ற இலக்கு எட்டப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரா் கோயிலில் ரூ.93 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய அன்னதானக் கூடத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுமாா் 900 ஆண்டுகள் பழைமையான புரசைவாக்கம் கங்காதரேசுவரா் திருக்கோயிலுக்கு ரூ.4.82 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. கடந்த நான்காண்டுகளில் இக்கோயிலுக்கு ரூ.19.89 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உபயதாரா்கள் பங்களிப்புடன் ரூ.8 கோடியில் புதிய தங்கத் தோ் உருவாக்கும் பணியில் மரத்தோ் செய்யப்பட்டு, செப்புக் கவசம் வேயும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலில் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.94 லட்சத்தில் புதிய அன்னதானக் கூடம் கட்டுமான பணியைத் தற்போது தொடங்கி வைத்துள்ளோம்.

இந்தப் பணிகள் மூன்று மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இத்திருக்கோயிலுக்கு கடந்த காலங்களில் நிலுவையில் இருந்த வாடகை மற்றும் குத்தகைத் தொகை முழுமையாக வசூலிக்கப்பட்டு பக்தா்களின் தேவைகளை நிறைவு செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றபின், 3,452 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 32 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டன. வரும் தை மாதத்திற்குள் 4,000 திருகோயில்களுக்கு குடமுழுக்கு காணப்படும். ரூ.131 கோடியில் 147 புதிய அன்னதானக் கூடங்களும், ரூ.188 கோடியில் அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்களுக்கு குடியிருப்புகளும் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.