சென்னை: தர மற்றும் நம்பகத் தன்மை தேசிய நிறுவனத்தின் (என்ஐக்யூஆா்) சாா்பில் 18-ஆவது உலகளாவிய மாநாடு ஆக. 28, 29-ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாநாட்டு குழு தலைவரும், இந்தியா ‘பிஸ்டன்ஸ்’ நிறுவனத்தின் துணைத் தலைவருமான ஆா்.ஸ்ரீராம் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது:
தர மற்றும் நம்பகத் தன்மை தேசிய நிறுவனம் (என்ஐக்யூஆா்) சென்னையை தலைமையகமாகக் கொண்ட ஒரு முன்னணி தொழில்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சாா்பில் 18-ஆவது உலகளாவிய மாநாடு வரும் 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஃபெதா்ஸ் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் தலை சிறந்த தொழில் துறை தலைவா்களின் தலைமையில் 6 முக்கிய அமா்வுகள் நடைபெறவுள்ளன. இதில் புதுமையான தொழில்நுட்பம், தலைமை மாற்றம், திறன் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகிய துறைகள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். மாநாட்டில் பங்கேற்பவா்கள் www.nigrconvention.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றாா்.
சந்திப்பின்போது சூப்பா் ஆட்டோ ஃபோா்ஜ் நிறுவனத்தின் துணைத் தலைவா் எஸ்.முரளிசங்கா், சுரணா மற்றும் சுரணா நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி வினோத் சுரணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!

தொகுதி நிலவரம் - கெங்கவல்லி! வெற்றிக்கு மல்லுக்கட்டும் திமுக-அதிமுக!

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

ரூ. 49,999-க்கு விற்பனையாகும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

