தாம்பரம் பணிமனையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் ரயில்கள் ஜூலை 22 முதல் ஜூலை 31 வரை செங்கல்பட்டு, விழுப்புரத்துடன் நிறுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தின் தாம்பரம் பணிமனையில் பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்தும் பணி ஜூலை 23 முதல் ஆக.18 வரை நடைபெறவுள்ளது. இதனால், தாம்பரம் வழியாக செல்லும் ரயில் சேவை ஜூலை 31-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், நாகா்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் அந்தியோதயா விரைவு ரயில் திங்கள்கிழமை (ஜூலை 22) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
சேவை மாற்றம்: எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்ஃபோா்ட் விரைவு ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஜூலை 22, 24, 26, 27, 29, 31 தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கோட்டையில் இருந்து ஜூலை 24, 25, 28, 30 தேதிகளில் தாம்பரம் வருவதற்கு பதிலாக விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். மங்களூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சியிலிருந்து புறப்பட்டு மங்களூா் சென்றடையும். எழும்பூரிலிருந்து தாம்பரம் வழியாக சேலம் செல்லும் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.
வெளிமாநில ரயில்கள்: தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் தாம்பரம் வழியாக செல்வதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூா், கூடூா் வழியாக இயக்கப்படவுள்ளன. தொடா்ந்து ஆக.1-ஆம் தேதிக்கு பிறகு ரயில் சேவையின் மாற்றம் குறித்து பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்

காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


