தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர்...
கடந்த 1978-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் பெண் பதிப்பாளரான எழுத்தாளர் அம்சவேணி பெரியண்ணன் இந்தப் பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளார்.


கடந்த 1978-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் பெண் பதிப்பாளரான எழுத்தாளர் அம்சவேணி பெரியண்ணன் இந்தப் பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளார்.
தமிழ் இலக்கியவாதியான அம்சவேணி தனது நூல்களையும், கணவர் பெரியண்ணன் எழுதிய கட்டுரைகளையும் பதிப்பிக்கும் வகையில் பதிப்பகத்தைத் தொடங்கினார். அதனடிப்படையில் தமிழ் இலக்கியம், பக்தி நூல்களுக்கு முக்கியத்துவம் அளித்து பதிப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 45 ஆண்டுகளில் பதிப்பகம் சார்பில் 3,000 தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பெரியண்ணன் உரையுடன் கூடிய கந்தபுராணம் 10 தொகுதிகள் மிகப் பிரபலமானவை. அதற்கடுத்ததாக, கையடக்கப் பிரதியான உரையுடன் கூடிய திருக்குறளும் பல பதிப்புகள் கண்டுள்ளன.
பள்ளி, கல்லூரிக் கல்வி சார்ந்த தமிழ் இலக்கிய நூல்களும் பதிப்பகம் சார்பில் அதிகளவில் வெளியிடப்பட்டுள்ளன. புலவர்
மா.நன்னன் எழுதிய "பிழையின்றி நல்ல தமிழில் எழுத' என்பன உள்ளிட்ட அவருடைய 10 நூல்கள் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு பரவலான வாசகர்களது வரவேற்பையும் பெற்றுள்ளன.
ஆன்மிக வரிசையில் அம்சவேணி எழுதிய "அரவிந்தர் அன்னை', "அருள்மிகு அம்மன்', "திருத்தலங்கள்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தப் பதிப்பக நூல்களான வேதியியல், இயற்பியல் கலைச்சொல் அகராதிகளும், முத்தமிழ் அகராதியும் முதன்முறையாக வெளியிடப்பட்டு, தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளன.
தற்போது இளைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில், அரசுப் பணியில்
சேருவதற்கான போட்டித் தேர்வு நூல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள், கலை நூல்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறுகள், சிறுவர் இலக்கியம் ஆகியவையும் தற்போது வெளியிடப்படுவதாகக் கூறுகிறார் பதிப்பக நிர்வாகி பெ.மயிலவேலன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...