கண்டெடுத்த கருவூலம்
"தசரதன் குறையும் கைகேயி நிறையும்', நாவலர் சோமசுந்தர பாரதியார், விலை ரூ.100, பக்.102.


"தசரதன் குறையும் கைகேயி நிறையும்', நாவலர் சோமசுந்தர பாரதியார், விலை ரூ.100, பக்.102.
திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் கடந்த 1926-ஆம் ஆண்டில் முதலில் வெளியிடப்பட்டது. தற்போது இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளது. புத்தகக் காட்சி அரங்கம் 4, 5 ஆகியவற்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ராமாயணத்தில் கைகேயி பாத்திரமானது ராமனைக் காட்டுக்கு அனுப்பியவள் என்ற குற்றச்சாட்டுக்குரிய பாத்திரமாகவே படைக்கப்பட்டதாக கருதுகிற நிலையில், அப்பாத்திரத்தின் நியாயத்தை உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ள முக்கியமான நூலாக உள்ளது.
"கம்பர் கவிக்கருத்து' உள்ளிட்ட பத்து தலைப்புகளில் ஆசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் தனக்கே உரிய தமிழ்ப்புலமையுடன் கைகேயி பாத்திர நியாயத்தை விளக்கியுள்ளார்.
புத்தகத்துக்கு மதுரைத் தமிழ்ச்சங்கக் கலாசாலைத் தலைமை ஆசிரியரும், செந்தமிழ் ஆசிரியருமான வித்வான் நாராயணையங்கார், பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார், ப.சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் அளித்துள்ள அணிந்துரைகளே தனி இலக்கிய விவாதத்தை தொடங்கி வைப்பனவாக உள்ளன.
கைகேயி பாத்திரத்தின் செயலை நியாயப்படுத்தும்போது ராமபிரானை விமர்சிக்காமலும் ஆசிரியர் கருத்தைப் பதிவிட்டிருப்பது சிறப்பாகும்.
கயிறு மேல் நடப்பதைப் போன்ற நூலின் கருத்து அமைந்த நிலையில், இலக்கியவாதிகள் அனைவரும்
அவசியம் படிக்க வேண்டிய நூல் என்கிறார் பதிப்பகப் பொறுப்பாளர் சுப்பையா முத்துக்குமாரசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...