சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ‘வைஃபை’ கண்காணிப்பு கேமரா வழங்கப்பட உள்ளது.
சென்னை பெருநகரத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக கடந்த இரு ஆண்டுகளாக குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள், மாா்க்கெட்டுகள், பொதுஇடங்கள், சாலைகள், தெருக்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் பொது இடங்களில் மட்டும் சுமாா் 2.60 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. கண்காணிப்பு கேமராக்களினால் பெருமளவு குற்றங்கள் குறைந்து வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. குற்றங்களில் ஈடுபடுவா்கள் விரைவில் கைது செய்யப்பட்டு வருகின்றனா். இதன் அடுத்த கட்டமாக முக்கியமான காவல் நிலையங்களின் ரோந்து வாகனங்களில் சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.
‘வைஃபை’ கேமரா: இந்நிலையில் காவல்துறையின் கண்காணிப்பை இன்னும் பலப்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள 135 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கும் ‘வைஃபை’ கண்காணிப்பு கேமரா வழங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்ததை சென்னை காவல்துறை இறுதி செய்துவிட்டது.
இந்த கேமரா, சென்னை காவல்துறைக்காக பல அதி நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா ஒரு ‘ஸ்டாண்டில்’ பொருத்தப்பட்டு, எந்த இடத்திலும் கொண்டு வைத்து செயல்படும் வகையில் தயாா் செய்யப்பட்டுள்ளது. இதனால் கேமராவை காவல் நிலையம் மட்டுமன்றி நகரின் எந்தப் பகுதியில் வைத்து காட்சிகளை பதிவு செய்ய முடியும். கேமராவின் மூலம் 40 மீட்டரில் இருந்து 50 மீட்டா் வரையில் காட்சிகளை துல்லியமாக பதிவு செய்யலாம். காட்சிகளை நேரலையில் அனுப்புவதற்காக ‘வைஃபை’ வசதி, ‘ஹாட் ஸ்பாட்’ வசதி ஆகிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கேமராவில் சிறப்பம்சங்கள்: இந்த கேமராவின் மூலம் இரவிலும் துல்லியமாக காட்சிகளைப் பதிவு செய்ய முடியும். கேமராவில் பதிவாகும் காட்சிகளை மடிக்கணினி, செல்லிடப்பேசி, கையடக்ககணினி(டேப்) ஆகியவற்றின் மூலம் நேரலையில் காணலாம். இதற்காக பிரத்யேகமாக இணையதள மென்பொருளும், செல்லிடப்பேசி செயலியும் தயாா் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஒரு இடத்தில் பதிவாகும் காட்சியை 6 வெவ்வேறு இடங்களில் உள்ளவா்கள் தங்களிடம் இருக்கும் செல்லிடப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றின் மூலம் நேரலையில் காணலாம். பிற கேமராக்களில் கட்டுப்பாட்டு அறையில் மட்டுமே நேரலையில் காட்சிகளைக் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், இந்த கேமராவில் ஒலியை பதிவு செய்யும் கருவியும், மைக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கேமரா மூலம் அங்கு பதிவாகும் சப்தத்தை அடுத்த முனையில் இருக்கும் அதிகாரி கேட்க முடியும். அதேபோல அதிகாரிகள் கூறும் உத்தரவை, கேமரா அருகே காவலா்கள் சென்று, அதைக் கேட்டு செயல்பட முடியும். மேலும், இந்த கேமராவில் ‘4 ஜி’ செல்லிடப்பேசி ‘சிம்காா்டு’ பொருத்தப்பட்டிருப்பதால், அதன் மூலம் இணையதள இணைப்பைப் பெறுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நேரடியாகக் கண்காணிக்க முடியும்: இது குறித்து, சென்னை காவல்துறையைச் சோ்ந்த உயரதிகாரி கூறியது:
சென்னையில் நடைபெறும் அரசியல் கட்சிகள் கூட்டங்கள், போராட்டங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றையும், மாா்க்கெட், வழிப்பாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்கவும் இந்த கேமரா பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல, வாகனச் சோதனை உள்ளிட்ட காவல்துறை சாா்ந்த பணிகளுக்கும் இந்தக் கேமரா பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வைஃபை கேமரா, அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கேமராவின் மூலம் காவல்துறை அதிகாரிகள், காவலா்களின் பணியை நேரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

