சென்னை தீவுத்திடல் பொருள்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்குகள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் இந்திய சுற்றுலா மற்றும் பொருள்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பொருள்காட்சி கடந்த 6-ஆம் தேதி தீவுத்திடலில் தொடங்கியது.
வழக்கம் போல் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் அந்தந்த துறைகளின் அலுவலக முகப்புத் தோற்றத்தை மாதிரியாகக் கொண்டு 60-க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நுழைவுக் கட்டணமாக பெரியவர்களிடம் ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எழில்மிகு அரங்குகள்: பொருள்காட்சியின் உள்பகுதியில் அரசுத் துறைகளின் அரங்குகள் பார்வையாளர்களை கவரும் வகையில் வண்ணமிகு தோற்றங்களில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அரங்குகளிலும் அந்த துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.
என்னென்ன சேவைகள்?: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் குழந்தைகளுக்கு கொழுக்கட்டை, சத்து மாவு உருண்டை இலவசமாக வழங்குதல், கர்ப்பிணிகள் மற்றும் வளர் இளம்பெண்களுக்கு உடல்நலம் குறித்த மருத்துவ ஆலோசனைகள், அரசின் சிறுசேமிப்பு திட்டத்தை குழந்தைகள் எவ்வாறு பயன்படுத்துவது குறித்த வழிமுறைகள், வீட்டில் வீணாகும் உணவுப்பொருள் உள்ளிட்ட கழிவுகளை இயற்கை உரமாக மாற்றுவது குறித்த பயிற்சி, சுயதொழில்களில் முதலீடு செய்வது மற்றும் வேளாண்மைக் கடன்கள் பெறும் முறைகள், தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் குறித்த தகவல்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த அனைத்துவிதமான சேவைகளையும் பொருள்காட்சி எனும் ஒரே கூடாரத்தில் கீழ் பெறக்கூடிய வாய்ப்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இந்த பொருள்காட்சிக்கு சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து பயன்பெற வேண்டுமென சுற்றுலாத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குண்டூசி முதல் கப்பல் வரை:
இங்கு நவீன ரக டி.வி.க்கள், குளிர்சாதனப் பெட்டிகள், கட்டில்கள், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் தயாரிக்கப்படும் பிரத்யேக தயாரிப்புகள் உள்ளிட்டவை 150-க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் கைத்தறி துணிவகைகள், பேஷன் ஆடைகள் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தையல் ஊசிகள் முதல் சுற்றுலாத்துறை சார்பில் நிறுவப்பட்டுள்ள மாதிரி நீர்மூழ்கிக் கப்பல் வரை அனைத்தையும் கண்டுகளிக்கலாம்.
குழந்தைகளின் சொர்க்கம்: குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமியரைக் கவரும் வண்ணம் இந்த ஆண்டு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பொழுதுபோக்கு அரங்குகள், சறுக்கு விளையாட்டுகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தேர், யானை, விமானம், ரயில், கப்பல் உள்ளிட்ட வடிவங்களிலான ராட்டினங்கள், பழங்கால குகை போன்ற வடிவமைப்புகள், தண்ணீரில் ரப்பர் படகு சவாரி, விடியோ கேம் விளையாட்டுகள் உள்பட குழந்தைகளைக் கவரும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
கூடுதல் விலைக்கு விற்பனை: இங்கு பல சிறப்பான விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும் டீ, காபி, அப்பளம், சுண்டல் மூலம் தயாரிக்கப்படும் சிற்றுண்டிகள், ஐஸ்கீரீம் வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழக்கமாக விற்கப்படும் விலையை விட 20 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.
மேலும் இரு சக்கர மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொருள்காட்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

