பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சென்னை புத்தகக் காட்சியில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடத்தப்பட்டு வந்த புத்தகக் காட்சி நிகழாண்டில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை 36-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது. தொடக்க விழாவுக்கு முன்னதாகவே நூற்றுக்கணக்கான பொதுமக்கள், புத்தக வாசகர்கள் அரங்குகளுக்கு வந்து புத்தகங்களை வாங்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் சனிக்கிழமை பெரும்பாலான பள்ளிகள், அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பொங்கல் கொண்டாட்டங்களும் தொடங்கியுள்ளன. இதனால் சனிக்கிழமை காலை முதல் சென்னை புத்தகக் காட்சியில் மக்கள் திரளத் தொடங்கினர்.
பிற்பகலுக்கு பிறகு குடும்பத்துடன் அணி அணியாக வந்த ஆயிரக்கணக்கான வாசகர்கள் தாங்கள் எதிர்பார்த்து வந்த அரங்குகளுக்குச் சென்று விருப்பமான நூல்களைத் தேர்வு செய்து வாங்கினர்.
புத்தகக் காதலர்களின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்வதற்காகவே சுமார் 750 அரங்குகளில் கலை, இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், சிறு கதைகள், கவிதைகள், நாவல்கள், ஆன்மிகம், மொழி பெயர்ப்பு நூல்கள், தமிழ் தவிர ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள், பொது அறிவு நூல்கள், சமையல் குறிப்புகள், கணினி மென்பொருள் நூல்கள், சிறுவர்களுக்கான நூல்கள் என லட்சக்கணக்கான தலைப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான அளவில் வைக்கப்பட்டுள்ள நூல்களை அவர்கள் தேடி வாங்கிச் சென்றனர்.
மேலும் நூல்களைத் தவிர சி.டி.க்கள், டி.வி.டி.க்கள் போன்றவற்றையும் சிறுவர்களுக்கான பேனா, பென்சில், வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் புத்தகக் காட்சியில் இடம் பெற்றுள்ளன. வாசகர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அரங்கின் பல்வேறு பகுதிகளில் சிற்றுண்டி, தேநீர் கடைகளும், அரங்கிற்கு வெளியே உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தகக் காட்சியின் இரண்டாவது நாளில் மட்டும் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்றுள்ளதாகவும், புதிய இடத்தில் அமைக்கப்பட்டாலும் வாசகர்களின் ஆதரவு தொடர்வதாகவும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


