எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

சென்னை காவல்துறையின் எஸ்.எம்.எஸ். சேவை: விழிப்புணர்வு இல்லாததால் புகார்கள் குறைவு

சென்னை, செப். 11: சென்னை பெருநகர காவல்துறை தொடங்கிய எஸ்.எம்.எஸ். சேவைக்கு வரும் புகார்களின் அளவு குறைந்துள்ளது. இந்த சேவை குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படாததே புகார்கள் க

News image
Updated On :28 டிசம்பர் 2023, 3:50 pm

கே.வாசுதேவன்

சென்னை, செப். 11: சென்னை பெருநகர காவல்துறை தொடங்கிய எஸ்.எம்.எஸ். சேவைக்கு வரும் புகார்களின் அளவு குறைந்துள்ளது. இந்த சேவை குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படாததே புகார்கள் குறைவதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

 ÷எனவே இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 சென்னையில் மக்களுக்கு ஏற்படும் சிறிய அளவிலான பிரச்னைகளை தீர்க்கும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மாநகர காவல்துறையின் சார்பில் எஸ்.எம்.எஸ். மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் சேவை தொடங்கப்பட்டது. புகார்களை எஸ்.எம்.எஸ். மூலம் 95000 99100 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

 இச்சேவை தொடங்கப்பட்ட காலத்தில் அது குறித்து விழிப்புணர்வு பிரசாரங்களை காவல்துறை தொடர்ச்சியாக செய்து வந்தது. இதன் காரணமாக அப்போது புகார் தெரிவித்து தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள் வரை வந்தன.

 அதன் பின்னர் பெரியளவில் எஸ்.எம்.எஸ். சேவை குறித்து பெருநகர காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக எஸ்.எம்.எஸ். வருவது படிப்படியாகக் குறைந்தது. தினமும் 40 க்கும் குறைவான எஸ்.எம்.எஸ்.களே வருவதாகக் கூறப்படுகிறது.

 இச்சேவையை பொருத்தவரையில் போக்குவரத்து தொடர்பாக அதிக புகார்கள் வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக பெண்கள், அதிகமாகப் புகார்கள் தெரிவிக்கின்றனர். இதில் குடும்பப் பிரச்னை, தொந்தரவு தொலைபேசி அழைப்புகள், பாலியல் தொந்தரவு, காதல் பிரச்னை, ஈவ்டீசிங் போன்றவை தொடர்பாகவே அதிகமாகப் பெண்கள் புகார்கள் செய்கின்றனர்.

 புகார் செய்யும் பெண்களின் பெயரை ரகசியமாக வைத்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தப் புகார்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம், ஆணையரின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த எஸ்.எம்.எஸ். சேவையின் மூலம் பல பிரச்னைகள் சிறிய அளவிலேயே கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதால், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுவதாக மாநகர காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 எனவே இச் சேவையை, பிரபலபடுத்த அதிகமாக விழிப்புணர்வுப் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாகவும் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.