எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

தியாகராய நகரில் 25 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

சென்னை.அக்.9: தீபாவளியை முன்னிட்டு தியாகராயநகருக்கு வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் 250 போலீஸôர் துணை ஆணையர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:45 pm

கே.வாசுதேவன்

சென்னை.அக்.9: தீபாவளியை முன்னிட்டு தியாகராயநகருக்கு வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் 250 போலீஸôர் துணை ஆணையர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

திருட்டு, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபடுவர்களை பிடிப்பதற்காக 25 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. 50 போலீஸôர் மாறுவேடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.

தியாகராயநகரில் ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருள்கள் கடைகள் மற்றும் நகைக் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு சாதாரண நாள்களிலேயே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பண்டிகைக் காலங்களில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்கள் மக்கள் கூட்டத்தால் திணறுகிறது.

பாதுகாப்பு அதிகரிப்பு: இம் மாதம் 26-ம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், தியாகராயநகருக்கு பொருள்கள் வாங்குவதற்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாள்களில் மேலும் பல மடங்கு கூட்டம் அதிகரிக்கும். இதன் காரணமாக பெருநகர காவல்துறை பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு போக்குவரத்து மாற்றத்தை சனிக்கிழமை முதல் செயல்படுத்தியுள்ளது.

200 போலீஸôர்: தியாகராயநகர் துணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ஆணையர் உள்பட 200 போலீஸôர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார், நாகஸ்வரராவ் சாலை, பனகல் பார்க் ஆகியப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில் 125 பேர் ஆயுதப்படையில் இருந்து வரவழைக்கப்படுகின்றனர். சாதாரண நாள்களில் இப் பகுதியில் 20 போலீஸôரே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

மாறுவேடத்தில்... இதேபோல திருட்டு, வழிப்பறி ஆகிய குற்றங்களைத் தடுக்கவும், இச்செயல்களில் ஈடுபடுகிறவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கும் மாறுவேடத்தில் 50 போலீஸôர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இப்போலீஸôர் 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அங்கு பணியில் ஈடுபடுகின்றனர்.

25 கண்காணிப்பு கேமராக்கள்: அந்தப் பகுதி முழுவதையும் கண்காணிக்க ரங்கநாதன் தெருவில் 10 இடங்களிலும், உஸ்மான் சாலையில் 10 இடங்களிலும், பிற பகுதிகளில் 5 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஓரிரு நாள்களில் பொருத்தப்பட உள்ளதாக காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார். இதற்காக தாற்காலிகமாக ரங்கநாதன் தெருவில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது.

கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் ஊர்க்காவல்படையில் இருந்து 100 பேர் கோரப்பட்டிருப்பதாக காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க 25 டிராபிக் வார்டன்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தவிர 8 கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தபடி போலீஸôர் அங்கு வருவோரை கண்காணிக்கின்றனர்.

இந்த நடவடிக்கைகள் மூலம் மக்கள் நெரிசலால் ஏற்படும் பிரச்னைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும், திருட்டு, வழிப்பறி ஆகியவற்றை தடுத்து குற்றவாளிகளைக் கைது செய்யலாம் என்று காவல்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்டிகைக் காலம் முழுவதும் நீடிக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.