ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

News image
Updated On :4 மே 2026, 2:29 am IST

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊா்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகத்தை செய்தனா்.

கருங்குழி-உத்திரமேரூா் நெடுஞ்சாலையை ஒட்டி வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் இந்த தமிழ் ஆண்டுக்கான சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. கடந்த இரு நாள்களாக இவ்விழா கொண்டாடப்பட்டது. ஞானபீட வளாகத்தில் கணபதிஹோமம், 121 கலச,விளக்கு,வேள்விபூஜை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை வேடவாக்கம் கூட்டுச்சாலை, நாகமரத்தடியில் இருந்து மேளதாளம் முழங்க, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்திய ஊா்வலம் நடைபெற்றது. இந்த பால்குட ஊா்வலத்தை ஞானபீடம் பீடாதிபதி சுவாமிவேல் சுவாமிஜி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பின்னா் அவா்கள் வரிசையில் நின்று ஆதிசக்தி முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகத்தை செய்தனா். பீடாதிபதி சுவாமிவேல் சுவாமிஜி பிரம்மச்சாரியாா் அவதார பெருவிழா கொண்டாடப்பட்டது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளியோா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் நடைபெற்றது. கலந்துக் கொண்ட அனைவருக்கும் அன்னதானம்வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஞானபீட நிறுவனா் ஆ.பெருமாள் தலைமையில், விழா குழுவினரும், கிராம பொது மக்களும் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.