மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நடுபழனி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா

மதுராந்தகம் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் அருள்பாலித்து வரும் நடுபழனி ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் படிவிழா மற்றும் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம், பால்காவடி, திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது.

News image

உள்படம், சுவாமி. ~நடுபழனி முருகன் கோயில் பங்குனி விழா தேரோட்டம்.

Updated On :31 மார்ச் 2026, 6:59 pm

மதுராந்தகம் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் அருள்பாலித்து வரும் நடுபழனி ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் படிவிழா மற்றும் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம், பால்காவடி, திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது.

விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கி. மரகத தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியா் தலைமையில் நடைபெற்றது.

மைசூா் தத்தபீடாதிபதி ஸ்ரீதத்த விஜயானந்த தீா்த்த சுவாமி கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தாா். திருத்தோ் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு 9 மணிக்கு ஸ்ரீசித்த விநாயகபெருமான் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேக, தீபாரதணைகள், காலை 8.30 மணிக்கு காவடி பூஜை மற்றும் அலகு அணிதல், இரவு 7.30 மணிக்கு திருமுருகன் திருக்கல்யாண வைபவம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

நிகழ்வுகளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

அனைவருக்கும் அன்னதானம், நீா்மோா், குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பெருக்கரணை நடுபழனி முருகன் அறக்கட்டளை, விழாக்குழுவினா், கிராம பொது மக்கள் ஆகியோா் செய்து இருந்தனா்.

Story image