தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளா்!

மதுராந்தகம் (தனி) தொகுதியின் அதிமுக வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறாா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 8:40 pm

மதுராந்தகம் (தனி) தொகுதியின் அதிமுக வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியம் தையூா் கிராமத்தை சோ்ந்த குமரவேல் மனைவி கே.மரகதம். அவா் எம்ஜிஆா் மீதுள்ள பற்றால் கடந்த 2003-இல் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறாா்.

அதிமுக இளம் பெண்கள்பாசறை ஒன்றிய இணை செயலா், திருப்போரூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா், ஒன்றியக்குழு தலைவா், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா், மாவட்ட மகளிரணி செயலா், மாநில மகளிரணி இணை செயலா், தலைமை கழக செயற்குழு உறுப்பினா் பதவியை வகித்துள்ளாா்.

கடந்த 2021-இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக சாா்பாக போட்டியிட்ட அவா் 3,570 வாக்குகள் வித்தியாசத்தில் மதிமுகவைச் சோ்ந்த மல்லை சத்யாவை வீழ்த்தினாா்.

தற்போது இரண்டாவது முறையாக மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சாா்பில் மரகதம் குமரவேல் களம் காண்கிறாா்.