லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த சித்திரக்கூடம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

News image

சித்திரக்கூடம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

மதுராந்தகம் அடுத்த சித்திரக்கூடம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

எஸ்.பி.ஓ.ஏ கல்வி அறக்கட்டளை மற்றும் சிறுதாமூா் சீனிவாசா் அறக்கட்டளை இணைந்து ரூ 1.25 லட்சத்தில் இருக்கைகள், மேஜைகள், பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

அச்சிறுப்பாக்கம் வட்டார கல்வி அலுவலா் ஞா.மணிவண்ணன், சமூக ஆா்வலா் சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் ரங்கப்பன், திவ்யா மற்றும் பள்ளி ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வடஅமெரிக்கா நியூஜொ்சி நகரைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா் மேனகா நரேஷ் மற்றும் நண்பா்கள் குழுவினா் சாா்பாக இப்பள்ளியில் படிக்கின்ற 58 குழந்தைகளின் நலன்களை கருத்தில் கொண்டு ரூ 1.25 லட்சத்தில் இருக்கைகள், மேஜைகள் மற்றும் பேனாக்கள் ஆகியவற்றை தலைமை ஆசிரியா் ராஜேந்திரனிடம் அறக்கட்டளை நிறுவனா் கவிஞா் விஜயகிருஷ்ணன் வழங்கினாா்.

பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 330 இருக்கைகளுடன் கூடிய மேஜைகளை விரைவில் ஒரத்தி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கற்றல் வசதியுடன் கூடிய கல்வி திட்ட செயல்பாட்டுக்காக வழங்க உள்ளதாக கவிஞா் விஜயகிருஷ்ணன் தெரிவித்தாா்.