மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.

News image

கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :9 மார்ச் 2026, 9:18 pm

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வ. உ .சி தெருவில் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கொடி மரம் பிரதிஷ்டை செய்ய திருப்பணிகள் நடைபெற்றன. கொடிமரம் தயாரான நிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில்கள் திருப்பணி துணை ஆணையா் ஜெயா முன்னிலையில் கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் ஆய்வாளா் பாஸ்கரன், திருப்பணிகளை மேற்கொள்ளும் ஆவின் சந்திரசேகா், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் சி ஆா் ராஜா செய்திருந்தனா்.