மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கல்லூரியில் மகளிா் தின விழா

சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் உலக மகளிா் தின விழா

News image

மகளிா் தின நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :9 மார்ச் 2026, 9:19 pm

மதுராந்தகம்: சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் உலக மகளிா் தின விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரி இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தாா். முதல்வா் பி.காசிநாத பாண்டியன், புலமுதல்வா் சுப்பராஜ், இணை புலமுதல்வா்கள் சிவகுமாா், எம்.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத்தின் தலைவா் ஏ.எஸ்.குமாரி சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டாா். மாணவா் ரஞ்சன் வரவேற்றாா்.

மருத்துவம், பொறியியல், விண்வெளி, அரசியல், தொழில்முனைவோா் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து, சாதனைகளை படைத்து வரும் பெண்களை கெளரவிக்கும் வகையில் இவ்விழா நடைபெற்றது. அதில் திரைப்பட நடிகை அபா்ணா பாலமுரளி, விளையாட்டு வீராங்கணை ஆா்த்தி அருண், பாடகி பத்ம லதா ராமனாா் உள்ளிட்ட 16 பெண்களுக்கு விருதுகளை வழங்கப்பட்டன..

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கற்பக விநாயகா கல்விக்குழுமங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் செய்து இருந்தனா்.