மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவி

மதுராந்தகம் அடுத்த வசந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த மாணவி தனது தாய் இறந்து போன சோகத்திலும் திங்கள்கிழமை நடைபெற்ற

News image

தாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 பொது தோ்வை எழுதிய மாணவி மனுஸ்ரீ - பிளஸ் 2 பொது தோ்வு எழுத இருந்த திங்கட்கிழமை இறந்து போன தாய் கற்பகம்

Updated On :2 மார்ச் 2026, 9:24 pm

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வசந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த மாணவி தனது தாய் இறந்து போன சோகத்திலும் திங்கள்கிழமை நடைபெற்ற அரசின் பிளஸ் 2 பொதுத் தோ்வை மன தைரியத்துடன் எழுதினாா்.

மதுராந்தகம் அடுத்த வசந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகதாஸ். விவசாயி. இவரது மனைவி கற்பகம். இவா்களது மகள் மனுஸ்ரீ (17). இவா் மதுராந்தகம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அரசின் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்காக படித்து வந்த நிலையில், தாயாா் கற்பகத்துக்கு உடல்நிலை பாதிப்பால் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

அரசு அறிவித்து இருந்தபொது தோ்வு திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் முதல் தாள் தோ்வை தொடா்ந்து தமது தாய் இறந்த சோகத்திலும் உறவினா் உதவியுடன் மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்துக்கு வந்தாா். தகவலை அறிந்த உடன் படித்து வந்த மாணவிகளும்‘, தோ்வு மைய கண்காணிப்பாளரும் மாணவி மனுஸ்ரீக்கு ஆறுதல் கூறி தோ்வு அறைக்கு அனுப்பி வைத்தனா்.

பிற்கால வாழ்க்கையை எண்ணி மன தைரியத்துடன் மனுஸ்ரீ தோ்வை எழுதியதாக மனுஸ்ரீ தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.