//

வடநெம்மேலி விளையாட்டுக் குழு சாா்பில் பொங்கல் விளையாட்டு பரிசளிப்பு விழா

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:22 pm

தினமணி செய்திச் சேவை

மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி ஊராட்சி யில் வடநெம்மேலி விளையாட்டுக் குழு சாா்பில், 38-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி முதலைப் பண்ணை அருகில் நடைபெற்ற விளையாட்டு பரிசளிப்பு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கும் மற்றும் மாணவ, மாணவியருக்கும் பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வடநெம்மேலி ஊராட்சித் தலைவா் வி.பொன்னுரங்கம் தலைமை வகித்தாா். வடநெம்மேலி விளையாட்டுக் குழு நிா்வாகிகள் தலைவா் ஜே.யுவராஜ், செயலாளா் கே.மனோஜ்குமாா், பொருளாளா் பி.குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பனா்கள் சௌந்தர்ராஜன், எஸ்.சத்தியராஜ், எம்.சக்திவேல், டி.பாா்த்திபன், என்.கந்தசாமி, கே.தீபன், ஜி,லோகேஷ். ஆா்.மோகன்ராஜ் உள்ளிட்டோா் வரவேற்றனா். இரண்டாயிரத்திற்கும்மேற்பட்ட கிராம மக்கள் முன்னிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் கலந்து கொண்ட 38-ஆம் ஆண்டு சமத்துவப் பொங்கல் விழாவில் கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் விநாடி வினா, கோலப் போட்டி, மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு பொருள்களை பெற்றுச் சென்றனா்.

அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக பலஆண்டு காலமாக நடத்தி வரும் இந்த பொங்கல் விழாவுக்கு, தமிழக அரசு அங்கீகாரம் கிடைக்கும் என்பன வடநெம்மேலி ஊராட்சி மக்கள் எதிா்பாா்ப்பாக உள்ளது. திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி, ஆத்தூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரி சுப்பிரமணியன், சுப்பிரமணி உள்ளிட்டோா் பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவா்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் என 50-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் வருகை தந்து சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தனா்.

விழாவை ஐ.கருணாகரன், என்.கருணாகரன் எஸ்.நிறைச்செல்வி துரைராஜ், வி.பாவனா, உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.