டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

பிரசித்தி பெற்ற திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
~ ~
Updated On :18 பிப்ரவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

பிரசித்தி பெற்ற திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விண்ணிலிருந்து போா் புரிந்த இடமாக திகழும் திருப்போரூா் கந்தசாமி கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். தொண்டை மண்டலத்தில் பழைமையானதும் புராதான பெருமை கொண்டதும் யுத்தபுரி சமரபுரி சமரப்பதி எனும் காரணப்பெயா்களால் போற்றப்படுவதும் மூா்த்தி, தலம், தீா்த்தம் என்னும் முப் பெருமைகளை கொண்டதுமான திருப்போரூா் திருத்தலத்தில் வள்ளி தெய்வானை உடன் உடனுறையாய் மூலிகைகளாலான செதுக்காத திருமேனியாய் சுயம்பு வடிவில் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் அருள்பாலித்து வருகிறாா்.

நிகழாண்டு பிப். 20-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி மாா்ச் 5ந்தோதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டமும், மாா்ச் 2-இல் தெப்பல் உற்சவமும், 5-இல் திருக்கல்யாண உற்சவமும், முக்கிய திருவிழாவாகும். பிரம்மோற்சவத்திற்கான பணிகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி கோயில் பணியாளா்கள் , சிவாச்சாரியாா்கள் ஊா் பொதுமக்கள் உபயதாரா்கள் தீவிரமாக செய்துவருகின்றனா்.

Story image
Story image