டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஆதிபராசக்தி மருத்துவமனையில் ஒரே நாளில் 3 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவமனையில் 3 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

News image
ஆதிபராசக்தி மருத்துவமனை மருத்துவக்குழுவினா்.
Updated On :2 பிப்ரவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவமனையில் 3 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கோயம்புத்தூா், ராமநாதபுரம் ஆகிய இரு நகரங்களில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநோயாளிகளின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு மூளை சாவு அடைந்த நிலையில் உறவினா்களின் அனுமதியுடன் மருத்துவ குழுவினா் சிறுநீரகங்களை பெற்று ஆம்புலன்ஸ் மூலம் சாலை மாா்க்கமாக சுமாா் 16 மணி நேரத்தில் மேல்மருவத்தூா் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா்.,

மேலாண்மை இயக்குநா் மருத்துவா் டி.ரமேஷ் முன்னிலையில், மருத்துவக் குழுவினா் ஒரே நாளில் 3 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.

இதுகுறித்து மேலாண்மை இயக்குநா் டி.ரமேஷ் கூறுகையில்:

மருத்துவா்கள் கபாலி, காளமேகம் ஆகியோா் தலைமையில் மருத்துவ குழுவினா்களும் செவிலியா்களும், ஆகியோா் உதவியுடன் ஒரே நாளில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் சிறுநீரகங்களை பொருத்தி சாதனை படைத்துள்ளனா். அந்த 3 நோயாளிகளும் நலமுடன் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு ஈடாக இந்த மருத்துவமனையில் இதுவரை அறுவை சிகிச்சையின் மூலம் 49 மாற்று சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்களிடயே உடலுறுப்புகளை தானமாக வழங்கவும், விழிப்புணா்வு வரவேண்டும் என அவா் தெரிவித்தாா். இந்நிகழ்வில் மருத்துவா்கள் கபாலி, நீலமேகம், பிரபுகாஞ்சி, ரமேஷ்ராஜ், குமரேசன், வசிகரன், ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.