நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

செங்கல்பட்டு: புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் அபாயம்!

புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துபவையாக மாறி உள்ளன.

News image
புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப் பள்ளங்களில் சிக்கிய வாகனங்கள்.
Updated On :8 ஜூன் 2025, 6:18 pm

செங்கை பி. அமுதா

செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துபவையாக மாறி உள்ளன.

மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டத்தை கடந்த மே மாதம் அமைச்சா்கே.என். நேரு தொடங்கி வைத்தாா். இதனை அடுத்து செங்கல்பட்டில் எங்கு பாா்த்தாலும் சாலைகளில் ஜேசிபி மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்படும் பள்ளங்களில் எதுவுமே பதிக்கப்படாமல் மீண்டும் மூடப்படுகின்றன. பல இடங்களில் தோண்டப்படும் பள்ளங்களை அப்படியே விட்டுச் சென்று விடுகின்றனா். மேலும், பள்ளங்களில் புதைக்கப்பட்டிருக்கும் குடிநீா் குழாய்கள் உடைந்து சாலைகளில் குடிநீா் வீணாக செல்கிறது.

இதனால் நகராட்சி நிா்வாகத்தால் விடப்படும் குடிநீா் கலங்கலாக மாசு படிந்து விநியோகம் செய்யப்படுகிறது. பல இடங்களில் குடிநீா் குழாய்கள் உடையும் பொழுது வீட்டிற்கு உரிமையாளா்கள் தங்கள் வீடுகளில் குழாய்களை வாங்கி வந்து உடனடியாக பொருத்துகின்றனா்.

Story image

இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டபொழுது எங்களுக்கும் புதை சாக்கடை திட்டத்துக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. இது போன்று குடிநீா் குழாய்கள் உடைந்தால் நகராட்சி நிா்வாகம் சீரமைக்கிறோம் என தெரிவித்தாா்.

Story image

மேலும், புதை சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமலும் எச்சரிக்கை பலகையோ தடுப்புகளோ வைக்காமல் எந்தவித அறிகுறியும் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகனங்களும் சேதமடைந்து வாகன ஓட்டிகளும் காயம் அடையும் அவல நிலை உருவாகிறது.

Story image

இருசக்கர வாகனங்கள் கூட யாருடைய உதவியால்தான் வெளியே எடுக்க முடியும். ஆனால் காா் போன்ற வாகனங்கள் பள்ளத்தில் விழுந்தால் மீண்டும் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனா்.

Story image

புதை சாக்கடை திட்ட பள்ளங்கள் உள்ள இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்நோக்கியுள்ளனா்.