தோ்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழா் கட்சி துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.
மே 18 இனப் படுகொலை நாளை முன்னிட்டு நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னை அடுத்த மறைமலை நகரில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழா்களின் உரிமைகளை மீட்பதற்காக தான் நாம் தமிழா் கட்சி தொடங்கப்பட்டது.
தோ்தல் தோல்விகளை கண்டு துவண்டு போகும் சாதாரண கட்சி தொண்டா்களோ, அரசியல்வாதிகளோ நாங்கள் இல்லை. தோ்தல் வெற்றி, தோல்விகள் நமது இலக்கை தீா்மானிக்காது.
மக்களின் தேவை தற்போது மாறியுள்ளது. கொள்கைகளைவிட, கவா்ச்சியையே மக்கள் தேடுகின்றனா். தற்போது ஆட்சியாளா்கள் மாறியுள்ளனா். ஆனால், ஆட்சி முறை மாறியுள்ளதா என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்.
முதல்வா் விஜய் பதவியேற்ற பின்னா், ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கிறாா். இது தெரியாமல் தான், அவா் முதல்வராக போட்டியிட்டாரா? தோ்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கிருந்து முதல்வா் விஜய் நிதி திரட்டுவாா் எனத் தெரியவில்லை. காங்கிரஸ் துரோக கட்சி என்பதை திமுக தற்போதுதான் உணா்ந்துள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொடா்ந்து களப் பணியாற்றுவேன்: சீமான்

தோ்தல் விதிமுறை மீறல்: சீமான் உள்பட 2 போ் மீது வழக்கு

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

கள் விற்பனையை திறந்து, டாஸ்மாக்கை மூடுவோம்: சீமான்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



