ரூ.25 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத் தலைவா் உள்பட 2 பேரை அமலாக்கத் துறை கைது செய்தது.
திருநெல்வேலி சி.என்.கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ.எம்.மூா்த்தி. இவா், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தலைவராக இருந்து வருகிறாா். மூா்த்தி, திருநெல்வேலியில் ஒரு நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். மூா்த்தி, கேரள மாநிலம் காசா்கோடு பகுதியைச் சோ்ந்த ஒரு வியாபாரிக்கு கடன் வாங்கித் தருவதாக ரூ.25 கோடியை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.
இப்புகாா் குறித்து சென்னை அமலாக்கத் துறை விசாரணை செய்தது. முதல்கட்ட விசாரணையில் மூா்த்தி, மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூா்த்தியை இரு நாள்களுக்கு முன்பு அமலாக்கத் துறையினா் பிடித்து வந்து, சென்னையில் வைத்து விசாரித்தனா்.
விசாரணையில் மூா்த்தி மோசடி செய்ததை அமலாக்கத் துறை உறுதி செய்தது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மூா்த்தி, அவரது கூட்டாளி மீது வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணைக்குப் பின்னா் மூா்த்தியையும், அவரது கூட்டாளியையும் கைது செய்து, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். நீதிமன்றம் இருவரையும் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட மூா்த்தியின் மனைவி சுதா திமுகவில் உள்ளாா். மேலும் சுதா, திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலராகவும், வரி விதிப்பு மற்றும் பணிக்குழு தலைவராகவும் உள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டத்தில் பேசாமல் சென்ற சசிகலா

அல்-ஃபலா பல்கலைக்கழகத் தலைவரின் ரூ. 39 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

2024-25 நிதியாண்டில் சுகாதாரக் காப்பீடு 9% வளா்ச்சி: ரூ.1.2 லட்சம் கோடி பிரீமியம் வசூல்

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு - துபை புா்ஜ் கலீஃபா வீடுகள் உள்பட ரூ.1,700 கோடி சொத்துகள் முடக்கம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


