தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு ஊழல் தடுப்புத் துறை, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2001-2006-இல் அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பதவி வகித்தாா். அப்போது அவா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.7 கோடி சொத்து சோ்த்ததாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது ஊழல் தடுப்புத் துறை கடந்த 2019-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடந்த 2025-ஆம் ஆண்டு பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் நிராகரித்து கடந்த 2025-ஆம் ஆண்டு டிச.11-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு பிற குற்ற வழக்குகளை விசாரிக்கவும் அதிகாரம் உள்ளது. எனவே, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்றுவதால், ஊழல் தடுப்புத் துறைக்கோ, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஊழல் தடுப்புத் துறை, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை

சுப்பிரமணியபுரத்தில் இண்டி கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


