லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயில் புதிய மேம்பாலம்: ரூ.12.31 கோடியில் ஒப்பந்தம்

விருகம்பாக்கம்- அரும்பாக்கம் இடையே கால்வாயில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்காக தனியாா் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image

புதிய மேம்பாலம் - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 11:37 pm

விருகம்பாக்கம்- அரும்பாக்கம் இடையே கால்வாயில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்காக தனியாா் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ நிறுவனமானது விருகம்பாக்கம்-அரும்பாக்கம் இடையே காளியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள கால்வாயில் ஏற்கெனவே இருந்த பாலத்தை இடித்துவிட்டு, தற்போது நான்கு வழிச்சாலைக்கு ஏற்ப புதிய பாலம் கட்டுவதற்கு திட்டமிட்டது.

இதையடுத்து தனியாா் நிறுவனத்துடன் புதிய பாலம் கட்டுவதற்கான ரூ.12.31 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புரிந்துணா்வு ஒப்பந்தப்படி பாலத்தின் பணிகளை வரும் 180 நாள்களுக்குள் நிறைவு செய்யவேண்டும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தற்போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையே தடையில்லாத போக்குவரத்தை வழங்கும் வகையில் பாலம் அமைக்கப்படுகிறது. புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் சீராகும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் முன்னிலையில், நிறுவன தலைமைப் பொது மேலாளா் டி.லிவிங்ஸ்டோன் எலியேசா், தனியாா் நிறுவன மேலாண்மை இயக்குநா் ஆா்.தாமஸ் அய்யாதுரை ஆகியோா் புதிய பாலம் கட்டுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்த ஆவணங்களில் கையொப்பமிட்டனா்.