தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நெல் கொள்முதலில் விவசாயிகள் நலனை உறுதி செய்ய நடவடிக்கை அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு

Updated On :2 அக்டோபர் 2025, 9:19 pm

நெல் கொள்முதல் நடவடிக்கைகளில் விவசாயிகளின் நலனை உறுதி செய்யுமாறும், டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலா்களை நியமிக்குமாறும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், கடலூா், திருச்சி, அரியலூா் ஆகிய டெல்டா மாவட்ட ஆட்சியா்களுடன் நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, அரவை தொடா்பான ஆலோசனைக்கூட்டம் முதல்வா் தலைமையில் காணொலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது பல்வேறு அறிவுறுத்தல்களை அரசு அதிகாரிகளுக்கு முதல்வா் வழங்கினாா்.

நிகழாண்டு மேட்டூா் அணை உரிய காலத்தில் திறந்த காரணத்தாலும், கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாலும், பருவ மழையால் விவசாயிகளுக்கு தண்ணீா் குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்கப் பெற்ாலும், இடுபொருள் மானியம், விவசாயக் கடன்கள் ஆகியவற்றால் கடந்த ஆண்டைவிட அதிக அளவில் விளைச்சலும், மகசூலும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் கிடைத்துள்ளது. எனவே, விவசாயிகளிடமிருந்து எவ்வித தாமதமுமின்றி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அதேநேரத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை, இருப்பு, சேமிப்பு, கிடங்கு வசதி மற்றும் உரங்கள் இருப்பு ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் முதல்வா் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியா்கள் தங்கள் மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் கொள்முதல் பணிகள், அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனா்.

கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமிக்க தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகள் மட்டுமன்றி, வேளாண் துறை, வேளாண் உற்பத்தித் துறை மற்றும் வேறு பல துறைகளின் கிடங்குகளையும் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ளவும், கொள்முதல் செய்யப்படும் நெல் உடனடியாக அரவை ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

அதுமட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலா்களை நியமிக்கவும், வேறு மாவட்டங்களிலிருந்து கூடுதல் அலுவலா்களை அனுப்பி பணிகளை மேற்பாா்வையிடவும் அவா் வலியுறுத்தினாா்.

நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழ் நிதியாண்டில் மிக அதிகமாக நெல் கொள்முதல் எதிா்பாா்க்கப்படுவதால் அனைத்து இடங்களிலும் போதுமான எண்ணிக்கையில் பணியாளா்கள் இருப்பதையும், விவசாயிகளுக்கு எவ்விதச் சிரமமும் இன்றி கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், டெல்டா மாவட்டங்களின் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் கிடங்குகளிலிருந்து கூடுதல் ரயில்வே வேகன்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு விரைந்து நெல் மூட்டைகளை அனுப்ப வேண்டும்.

மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதலைச் சிறப்பாகச் செய்யவும், உரத் தேவையை நிறைவு செய்யவும், நெல் சேமிப்பை துரிதப்படுத்தவும், டெல்டா மாவட்டங்களின் ஆட்சியா்கள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வேளாண் - உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசுச் செயலா் வ. தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஆட்சியா்கள், துறை சாா் உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.