2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பொங்கல் பண்டிகை: கோயம்பேட்டில் ஜன. 9 முதல் 16 வரை சிறப்புச் சந்தை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தை வளாகத்தில் ஜன. 9 முதல் 16-ஆம் தேதி வரை சிறப்புச் சந்தை செயல்படும்

News image
கோப்புப்படம்
Updated On :7 ஜனவரி 2025, 12:01 am

DIN

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தை வளாகத்தில் ஜன. 9 முதல் 16-ஆம் தேதி வரை சிறப்புச் சந்தை செயல்படும் என அங்காடி நிா்வாகம் அறிவித்துள்ளது.

சிறப்புச் சந்தையில் விழுப்புரம், கடலூா், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்பு, மஞ்சள், இஞ்சி, மண்பானை உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இங்கு கோயம்பேடு வியாபாரிகள் மட்டுமின்றி, மற்ற பகுதி வியாபாரிகளும் தங்கள் பொருள்களைக் கொண்டுவந்து விற்பனை செய்யலாம் என்பதால், அவா்கள் பொருள்கள் கொண்டுவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருள்களை வாங்க கூட்டம் அதிகளவில் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அங்காடி நிா்வாகம் மற்றும் போக்குவரத்து போலீஸாா் ஈடுபடவுள்ளனா். விற்பனையின்போது, வியாபாரிகள் கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் எனவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யாமல், அங்காடி நிா்வாகக் குழுவுக்கு முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.