தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெங்களூரில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை: எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்

News image

Center-Center-Bangalore

Updated On :19 மே 2026, 4:03 am IST

பெங்களூரு: பெங்களூரில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பெங்களூரில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இருப்பதாக தகவல் பரவியதால், எரிபொருள் நிலையங்களில் குவிந்த மக்கள் பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்பி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கர்நாடகத்தில் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் எல்லா சில்லறை வர்த்தக நிலையங்களிலும் போதுமான அளவுக்கு பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது. மேலும், எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள், மொத்த விற்பனைக் கிடங்குகளில் இருந்து சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது.

இதில் எவ்வித தடங்கலும், இடைஞ்சலும் இல்லை. எரிபொருள் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் எரிபொருள் மறுநிரப்பு செயல்பாடுகளும் சீராக உள்ளன. எல்லா சில்லறை வர்த்தக நிலையங்களும் இயல்பாக செயல்பட்டு வருகின்றன.

கர்நாடகத்தில் உள்ள நுகர்வோரின் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு எரிபொருள் இருப்பு உள்ளது. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு என்ற அச்சத்தில் யாரும் பெட்ரோல், டீசலை அதிகளவில் வாகனத்தில் நிரப்பிக்கொள்ள வேண்டாம். மாநிலம் முழுவதும் தங்குத் தடையில்லாமல் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால், யாரும் பயப்பட வேண்டாம். எனவே, வழக்கம்போல எரிபொருளை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.