நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சதானந்த கெüடா தலைமையில் பாஜக அரசு நிலைக்குமா?

பெங்களூர், மே 13: உள்கட்சிப் பூசல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் முதல்வர் சதானந்த கெüடா தலைமையிலான பாஜக அரசு நிலைக்குமா என்ற கேள்வி மக்கள் அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 2008-ல் தென்னிந்தியாவில் ம

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:21 pm

ந.முத்துமணி

பெங்களூர், மே 13: உள்கட்சிப் பூசல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் முதல்வர் சதானந்த கெüடா தலைமையிலான பாஜக அரசு நிலைக்குமா என்ற கேள்வி மக்கள் அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

2008-ல் தென்னிந்தியாவில் முதல்முறையாக கர்நாடகத்தில் மலர்ந்த பாஜக ஆட்சிக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. 2009, 2010, 2011-ம் ஆண்டுகளில் எடியூரப்பா தலைமையில் இயங்கி வந்த பாஜக ஆட்சியைக் கவிழ்க்க பல்வேறு முயற்சிகள் அந்தக் கட்சியில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன. 45 எம்எல்ஏக்களுடன் ஹைதராபாத்-கோவாவில் முகாமிட்டிருந்த அன்றைய அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, எடியூரப்பாவை மாற்றும் வரை ஓயமாட்டோம் என்று போர்க்கொடி உயர்த்தினார். அதேபோன்றதொரு சூழல் 2010-ம் ஆண்டில் எழுந்தது. 5 சுயேச்சைகள் உள்பட 16 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு அளித்த வந்த ஆதரவை திரும்பப் பெற்றனர். பேரவைத் தலைவர் போப்பையாவின் உதவியுடன் அவர்களை பதவி நீக்கம் செய்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடியூரப்பா தோற்கடித்தார்.

2011-ல் லோக் ஆயுக்த அறிக்கையில் சட்டவிரோத சுரங்கத்தொழிலில் ஈடுபட துணை போனதாக எடியூரப்பா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால், அவர் முதல்வர் பதவியை துறக்க நேர்ந்தது. அப்போதும் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி, சதானந்த கெüடாவை அந்தப் பதவிக்கு கொண்டுவந்தனர்.

அடுத்த முதல்வராக ஜெகதீஷ்ஷெட்டர் பதவியேற்பார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணம் எடியூரப்பாவால் முன்னிறுத்தப்பட்ட சதானந்த கெüடா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். சதானந்தகெüடாவை உச்சிமுகர்ந்து பாராட்டிய எடியூரப்பா, அவரது அமைச்சரவையில் தனது ஆதரவாளர்களுக்கு கணிசமான இடங்களையும் பெற்றுத் தந்தார்.

6 மாதங்களுக்கு பிறகு பதவியை தனக்கு விட்டுத்தர வேண்டுமென்ற ரகசிய ஒப்பந்தத்தின்படிதான் சதானந்த கெüடாவுக்கு முதல்வர் பதவியை எடியூரப்பா விட்டுத் தந்ததாக அவரே பிறகு தெரிவித்தார். அதன்படி, 6 மாதங்களுக்கு பிறகு முதல்வர் பதவியை விட்டுத்தருமாறு சதானந்த கெüடாவிடமும், ஏற்கெனவே வாக்களித்தப்படி அந்தப் பதவியில் தன்னை அமர்த்துமாறு பாஜக மேலிடத்துக்கும் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்தார்.

இதை பொருள்படுத்தாத பாஜக மேலிடம், சதானந்த கெüடாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவும் உடந்தையாக இருந்தது தெரியவந்ததும், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த எடியூரப்பா, சதானந்த கெüடாவை வீழ்த்த வியூகம் அமைத்தார்.

எந்த குற்றச்சாட்டுக்காக முதல்வர் பதவியை எடியூரப்பா இழந்தாரோ, அந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் உற்சாகமடைந்த எடியூரப்பா, முதல்வர் பதவியில் அமர எல்லா வகையான முயற்சிகளையும் செய்து பார்த்தார். அதற்கு அடிபணியாத கட்சித் தலைமை, பாஜக ஆட்சி முடியும் வரை சதானந்த கெüடாவே முதல்வராக நீடிப்பார் என்று அறிவித்தது.

இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் சட்டவிரோத சுரங்கம் தொடர்பான வழக்கு பதிவானது. அதை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்து உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனிடையே தனது ஆதரவு அமைச்சர்களை குறை கூறி 3 மாதங்களுக்கு முன்பு நிதின்கட்கரிக்கு சதானந்த கெüடா எழுதிய கடிதத்தை துருப்புச் சீட்டாக வைத்து கொண்டு அவருக்கு எதிராக எடியூரப்பா காய் நகர்த்தி வருகிறார்.

தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த சதானந்த கüடாவை வீழ்த்துவதற்கு தான் கொண்டு வந்த பாஜக ஆட்சியை பலி கொடுக்கவும் எடியூரப்பா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது நாள் வரை பாஜக மேலிடத்தை மிரட்டி வந்த எடியூரப்பா, இப்போது 9 அமைச்சர்கள், 15 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை வைத்துக் கொண்டு மேலிடத்துடன் பேரம் பேசத் தொடங்கியிருக்கிறார்.

சதானந்த கெüடாவை நீக்கினால் பாஜக ஆட்சி தொடர ஆதரவளிப்பது, தவறினால் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைவது என்று எடியூரப்பா தீர்மானித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய கட்சியைத் தொடங்கி ஆட்சியை பிடிப்பது இயலாத காரியம் என்பதால், அடுத்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்தால் சிபிஐ வழக்கில் இருந்து விடுவிப்பதாக சோனியா தரப்பில் இருந்து சமிக்ஞைகள் வந்ததாகக் கூறப்படுகிறது.

தனது அரசியல் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, சிபிஐ வலையில் இருந்து தப்பிக்க ஆட்சி கவிழ்ப்பு போன்ற எந்த நகர்வுக்கும் எடியூரப்பா துணிவார் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.