கோமாளி அரசின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை: உதயநிதி கண்டனம்2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

இடைத்தேர்தலுக்கு முன்பாக ஈரான் மீது தாக்குதலுக்கு வாய்ப்பு..! மீண்டும் குழப்பிய டிரம்ப்!

ஈரான் மீதான தாக்குதல் பற்றிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய பதில் குறித்து...

President Donald Trump arrives on Air Force One, Friday, Oct. 23, 2026, at President Donald J. Trump International Airport in West Palm Beach, Fla. (AP Photo/Mark Schiefelbein)

அமெரிக்க அதிபர் டிரம்ப் - படம்: ஏபி

Updated On :

ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்வது பற்றிய செய்தியாளர் கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், “தீவிரமான தாக்குதல் நடத்தவும் வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது" என்றார்.

சமீபத்திய சமூக வலைதள பதிவில் அமெரிக்க அதிபர் டிரம்ப், “ இடைத்தேர்தல் முடியும் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்” எனக் கூறியிருந்த நிலையில், தற்போதைய பதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நவ.3ஆம் தேதி அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றன. அதற்கான பரப்புரையில் அமெரிக்க அதிபர் தீவிரம் காட்டி வரும் நிலையில் ஈரான் மீதான தாக்குதலையும் விடுவதாக இல்லை எனக் கூறியுள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் தொடருமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருப்பதாவது:

நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை உங்களிடம் கூறுவேன் என நினைக்கிறீர்களா? அதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் அழகான, மிகப்பெரிய ஒப்பந்தத்திற்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. ஆனால், பிரச்னை என்னவென்றால், அவர்கள் அந்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை வாஷிங்டன் சீர்குலைப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் குற்றம் சாட்டியிருந்தார்.

அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருத்துக்களில், ஈரானின் உச்ச தலைவர் ஈரானிய அதிகாரிகளுக்கு "ஒப்பந்தத்தை முடித்துவிடுங்கள்" என்று அறிவுறுத்தியதாகவும், ஆனால் "இந்தக் கயவர்கள் ஆட்டத்தின் விதிகளை மீறிவிட்டனர்" என்றும் அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை இஸ்ரேலில் நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ, அல்லது அமெரிக்க இடைத்தேர்தல்களுக்கு முன்பாகவோ இஸ்ரேல் - அமெரிக்கா ஒருவரையொருவர் மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்பிருப்பதால் மக்களிடையே பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Summary

US President Donald Trump weighs more strikes or deal with Iran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.