இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது!முதல்வருக்கு கொலை மிரட்டல்: வேலூர் திமுக கவுன்சிலர் கைது!காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!அஇபுதமமுக-விலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்: கட்சித் தலைவர் அறிவிப்பு!சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய திருத்தம்: தமிழக அரசு அரசாணை!தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

பிரான்ஸில் நாளை மீண்டும் போராட்டம்! முன்னெச்சரிக்கை தீவிரம்; 70,000 போலீஸார் குவிப்பு!

பிரான்ஸ் நாட்டில் நாளை மீண்டும் போராட்டம் நடைபெறவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்...

Paris

பிரான்ஸ் நாட்டில் பலகைகளைக் கொண்டு அடைக்கப்பட்டுள்ள பிரபல நிறுவனங்களின் கடைகள்... - ஏபி

Updated On :

பிரான்ஸ் நாட்டில் வரும் சனிக்கிழமை (அக். 24) மீண்டும் போராட்டம் நடைபெறவுள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வேலையின்மை, கல்வி நிலையங்களின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தரமற்ற சூழல் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, அங்குள்ள கடைகள், வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன. மேலும், காவல் துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வன்முறையில், பாரீஸ் நகரத்தில் இருந்த புகழ்பெற்ற சிலைகள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டடங்கள் கலவரக்காரர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் பாரீஸ் நகரத்தின் முக்கிய பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அந்நகரம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 70,000-க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இத்துடன், பாரீஸில் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே காவல் துறை அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிரான்ஸ் நாட்டின் முக்கிய மாணவர் சங்கமான யூ.என்.இ.எஃப். மற்றும் யெல்லோ வெஸ்ட் மூவ்மெண்ட் ஆகிய அமைப்புகளின் போராட்டப் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் கூறுகையில், “கலவரக்காரர்கள், கொள்ளையர்கள் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் உடன் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். நாங்கள் நாளைக்காகத் தயாராக இருக்கிறோம். மிகுந்த கண்காணிப்புடனும், உறுதியுடனும் இருப்போம்” எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள், கலாசார மையங்கள் நாளை திறக்கப்படாது என அவற்றின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

As protests are set to take place again in France next Saturday (Oct. 24), precautionary measures are being taken intensively.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.