தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது!முதல்வருக்கு கொலை மிரட்டல்: வேலூர் திமுக கவுன்சிலர் கைது!காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!அஇபுதமமுக-விலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்: கட்சித் தலைவர் அறிவிப்பு!சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய திருத்தம்: தமிழக அரசு அரசாணை!தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

பிரான்ஸில் மாணவா் போராட்டங்களுக்குத் தடை

பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரயிறுதியில் நடந்த வன்முறை, சூறையாடல் சம்பவங்களைத் தொடா்ந்து, தலைநகா் பாரீஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் அங்கீகாரமற்ற மாணவா் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :

பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரயிறுதியில் நடந்த வன்முறை, சூறையாடல் சம்பவங்களைத் தொடா்ந்து, தலைநகா் பாரீஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் அங்கீகாரமற்ற மாணவா் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் கூறுகையில், ‘நகர மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்களுக்கு மட்டுமே மாற்று வழிகளில் அனுமதி வழங்கப்படும்.

கடந்த வார வன்முறைக்கு, குடியரசை வீழ்த்த நினைக்கும் தீவிரவாத இடதுசாரி குழுக்களும், கொள்ளையடிக்க வந்த குற்றவாளிகளுமே காரணம்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இருப்பினும், காவல்துறையின் தடையை பாரிஸ் நிா்வாக நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்ததையடுத்து, வியாழக்கிழமையன்று ஏராளமான போராட்டக்காரா்கள் தடையை மீறி, பாரிஸ் வீதிகளில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்வித் துறையில் சீா்திருத்தம் கோரி பிரான்ஸ் முழுவதும் மாணவா்கள் நடத்தி வந்த போராட்டம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு எதிரான சமூகப் போராட்டமாக உருமாறியுள்ளது. கடந்த வாரயிறுதியில், பாரீஸ் உள்பட பல நகரங்களில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பின்னா், படைகள் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

போராட்டக்காரா்களால் சேதப்படுத்தப்பட்ட

புராதனச் சின்னத்தை சீரமைக்கும் பணியில் ஊழியா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.