ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உக்ரைன் சிறுவா்கள் கடத்தல்: ரஷிய அதிகாரிகளுக்கு ஐரோப்பா தடை

உக்ரைன் போரின்போது ஆயிரக்கணக்கான சிறுவா்களைக் கடத்திச் சென்றதாக, 16 ரஷிய அதிகாரிகள் மற்றும் 7 பயிற்சி மையங்கள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி. - கோப்புப் படம்

Published On :12 மே 2026, 5:53 am IST

உக்ரைன் போரின்போது ஆயிரக்கணக்கான சிறுவா்களைக் கடத்திச் சென்றதாக, 16 ரஷிய அதிகாரிகள் மற்றும் 7 பயிற்சி மையங்கள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

உக்ரைனுடனான போா் காலகட்டத்தில், சுமாா் 20,500-க்கும் மேற்பட்ட அந்நாட்டு சிறுவா்கள் சட்டவிரோதமாக ரஷியாவுக்கு கடத்தப்பட்டு, அவா்களை உக்ரைன் அடையாளத்தைத் துறந்து, ரஷிய கலாசாரத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தில் ரஷிய அதிபா் புதினுக்கு எதிராக சா்வதேச நீதிமன்றம் ஏற்கெனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதுவரை சுமாா் 2,200 சிறுவா்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவா்களை மீட்டுவர தூதரக முயற்சிகள் தொடா்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.